கி.வீரமணி பேச்சை கேட்டு இந்து சமய அறநிலையத்துறை ’பிராமண’ செயலாளரை மாற்றுவதா? பாஜக வானதி சீனிவாசன் கண்டனம்

Published On:

| By Mathi

BJP Vanathi Srinivasan

இந்து சமய அறநிலையத்துறையின் செயலாளரான சுவர்ணா ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டுள்ளதற்கு பாஜகவின் (BJP) மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை: ஆட்சிக்கு வந்ததும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவர்ணா அவர்களை நியமித்தார். அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அவரது ஜாதியை கண்டுபிடித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக நியமிப்பதா என கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT


அதைத் தொடர்ந்து ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நேற்று ரமேஷ் பதவியேற்றார். அவரது ஜாதியையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த கி.வீரமணி அவர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், செயலாளர் என இரு பதவிக்கும் பிராமணர்களை எப்படி நியமிக்கலாம் என மிரட்டல் தொனியில் அறிக்கை விட்டிருந்தார்.இந்நிலையில் இன்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து சுவர்ணா அவர்கள் விடுவிக்கப்பட்டு, சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாற்றுவதா?


ஹிந்து மத வெறுப்பாளரான கி.வீரமணியின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பணிந்து விட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. முதலமைச்சராகப் பதவியேற்றதும், சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழக தலைமை அலுவலகத்திற்கு சென்று கி.வீரமணி அவர்களை ஜோசப் விஜய் சந்தித்ததால் இந்த சந்தேகம் வலுப்படுகிறது.கி.வீரமணியின் மிரட்டலுக்கு பணிந்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதால், அதிகாரிகள் இடையே ஜாதி பற்றிய தாக்கத்தைதான் ஏற்படுத்தும். இனி ஜாதி, மத அடிப்படையில்தான் நியமனங்கள், இடமாறுதல்கள் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மத வெறுப்பாளர் கி.வீரமணி அவர்களின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பார்ப்பனரான ரமேஷ், செயலாளராக பார்ப்பனரான சுவர்ணா ஆகியோரை நியமிப்பதா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதேபோல திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணியும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share