ராஜ்ய சபா : தமிழ்நாட்டில் ஜுன் 18 இடைத்தேர்தல்!

Published On:

| By Kavi

10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 பேரின் பதவி காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் தேதி இன்று (மே 22) தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில்,  

ADVERTISEMENT

தேர்தல் அறிவிக்கை வெளியிடுதல் – 01 ஜூன், 2026

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் – 08 ஜூன், 2026

ADVERTISEMENT

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை- 09 ஜூன், 2026

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாள் – 11 ஜூன், 2026

வாக்குப்பதிவு நாள் – 18 ஜூன், 2026

வாக்கு எண்ணிக்கை – 18 ஜூன், 2026

தேர்தல் நடைமுறைகளை முடிப்பதற்கான இறுதி நாள் – 20 ஜூன், 2026

ஆந்திரப் பிரதேசம்,  குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும், ஜார்க்கண்ட்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம்  ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கும் மாநிலங்களைவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவைப் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த பதவிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் ராஜ்யசபா உறுப்பினருக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share