தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா. கிருஷ்ணன் நியமனம்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா. கிருஷ்ணன் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். 

அதிமுகவில் இருந்து ஆலங்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கு.பா.கிருஷ்ணன். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அதன் பின் கடந்த ஜனவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கு.பா.கிருஷ்ணன்  லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் அவர் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லப்பட்டது. 

இந்தசூழலில் அவர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,  “ ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 தமிழ்நாடு முதலமைச்சர் .ச. ஜோசப் விஜய் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.பா. கிருஷ்ணனை நியமனம் செய்து இன்று (22.05.2026)  ஆணையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share