தமிழகத்தில் இன்று 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்ததில் இருந்து நிர்வாக ரீதியான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
அந்தவகையில் இன்று (மே 22) 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ ஜி செந்தில்குமார், சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜி ஆகவும்,

சென்னை மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், திருச்சி மாவட்ட எஸ்பி ஆகவும்,
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி, சென்னை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி II ஆகவும்,
கோவை மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் அசோக்குமார் தென்காசி மாவட்ட எஸ்பி ஆகவும்,
கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் உட்கோட்ட உதவி எஸ் பி அக்ஷய் அனில் வாகரே, பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட எஸ் பி ஆகவும்,
கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோயில் உட்கோட்ட உதவி எஸ்பி லலித் குமார், பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
