தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று 22 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட உத்தரவில்
1.தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ) தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும்,
2.முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வணிகவரி, பத்திரப்பதிவு மற்றும் அறநிலையத்துறை செயலாளராகவும்,
3.சுவர்ண ஐஏஎஸ் சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளராகவும்,
4.தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேலாண் இயக்குனர் சந்திப் நந்தூரி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சிறப்பு செயலாளராகவும்,
5.சிஎம்டிஏ முன்னாள் உறுப்பினர் செயலாளர் பிரகாஷ், வருவாய் நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மைச் செயலாளராகவும்,
6.எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் ஷோபனா ஜவுளித்துறை ஆணையராகவும்,
7.வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் சில்பா பிரபாகர் சதீஷ் தொழிலாளர் நலத்துறை ஆணையராகவும்
8.போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஆணையர் கிரண் குரலா நகர ஊரமைப்பு துறை ஆணையராகவும்,
9.விடுப்பில் இருந்த விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ் மீன்வளத்துறை இயக்குனராகவும்
10.கைத்தறித்துறை இயக்குனர் மகேஸ்வரி ரவிக்குமார் சமூக நலத்துறை இயக்குனராகவும்,
11.சிப்காட் மேலாண் இயக்குனர் செந்தில்ராஜ், ஆதி திராவிட நலத்துறை இயக்குனராகவும்,
12.தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை திட்ட II (கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம்) இயக்குனர், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஆணையராகவும்,
13.விடுப்பில் இருந்து திரும்பிய சாரு ஸ்ரீ ஐஏஎஸ், கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனராகவும்,
14.முன்னாள் கரூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும்,
15.தமிழ்நாடு ஊரக மாற்றத்திட்டத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரியாக இருக்கும் ஆஷா அஜித் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இயக்குனராகவும்,
16.டாஸ்மாக் மேலாண் இயக்குனராக இருந்த கிறிஸ்துராஜ், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனராகவும்
17.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளராக இருந்த கார்த்திகேயன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முதன்மைச் செயலாளராகவும்
18.சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்த வினய் தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் மேலாண் இயக்குனராகவும்,
19.தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் மேலாண் இயக்குனராக இருந்த அனீஸ் சேகர் தேசிய நலவாழ்வு குழுமத்தின் மாநிலத் திட்ட இயக்குனராகவும்,
20. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக இருந்த சஜீவனா, தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரியாகவும், (கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனர்)
21.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராமன், சிப்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும்,
22.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க கூடுதல் ஆணையர் லலிதாதித்யா நீலம், சேலம் மாநகராட்சி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
