MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்க தெரியாதா? – உதயநிதி ஸ்டாலின்

By Mathi

|

Published on 4 Nov 2026, 2:16 PM

Udhayanidhi-Vijay

முதல்வர் விஜய் அரசை வெங்காய கொள்முதல் விவகாரத்தை முன்வைத்து கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி.

ADVERTISEMENT

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.

மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.

ADVERTISEMENT

இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, “நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை – கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது.

அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி.

இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?

ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்?

வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel