கோவை பெரியார் அறிவுலகத்தை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
கோவை அவிநாசி சாலை நீலாம்பூர் பகுதியில், கோவை மாவட்ட திமுக அலுவலகம் கட்டப்பட உள்ளது.
இந்த அலுவலகத்துக்கு காலை 11 மணியளவில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் பணியை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.
அவருடன் திராவிடர் கழக தலைவர் வீரமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது அங்கு வந்திருந்த மாணவ மாணவிகளிடம், கலந்துரையாடிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின் நூலகத்தின் வசதிகள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார்.
கோவையில் பெரியார் பெயரில் அறிவுலகத்தை கட்டி தந்ததற்காக திராவிடர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று மாலை 6:00 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









