அமைச்சர் ஜெகதீஸ்வரியின் ‘ஜெகா விஜய்’ வீடியோ வைரல்

By Pandeeswari Gurusamy

|

Published on 4 Nov 2026, 11:18 AM

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் மாணவர்கள் முடி வெட்டுவது தொடர்பான பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது ‘ஜெகா விஜய்’ வீடியோ வைரலாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அயன் ரெட்டிபட்டி கிராமத்தில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டார். “மாணவர்கள் தப்புத்தப்பாக முடி வெட்டி வந்தால் மொத்தமாக மொட்டை அடித்து விடுங்கள்; அதில் தப்பே இல்லை. நான் என் பிள்ளையாக நினைத்துச் சொல்கிறேன், அப்போதுதான் அவன் சரியாக முடி வெட்டுவான்” என்று என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி நடிகர் விஜய்யின் ரசிகையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கலந்துகொண்ட பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் கரு. பழனியப்பன் ஒருங்கிணைத்த அந்த விவாதத்தில், நடிகர் விஜய்யின் ரசிகையாக ஜெகதீஸ்வரி பங்கேற்று இருந்தார்.

அப்போது பேசிய அவர், “எனது பெயர் ஜெகா. என்னை ‘ஜெகா விஜய்’ என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் புகைப்படத்தைத் தடை செய்தார்கள் அல்லவா? நான் அவரது தங்கையாக இருந்து, எனது அண்ணனின் புகை பிடிக்கும் படத்தை கையில் பச்சையாகக் குத்தியுள்ளேன்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் “விஜய் புகைப்பிடிக்கும் படத்தை கையில் பச்சை குத்தியிருக்கும் அமைச்சருக்கு மாணவர்கள் முடி வெட்டுவதை பற்றிப் பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது?” என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வன்னி அரசு விளக்கம்:

ஜெகதீஸ்வரியின் சர்ச்சை பேச்சு குறித்து அதே பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு கூறுகையில், “ஒழுங்காக முடி வெட்டாமல் வரும் மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று பேசியது தொடர்பாக ஜெகதீஸ்வரி என்னிடம் பேசினார். மாணவர்கள் நலனில் அக்கறையுடன் ஒரு தாயாகவே தான் அவ்வாறு பேசியதாக அவர் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel