கோவை: திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்

By Pandeeswari Gurusamy

|

Published on 4 Nov 2026, 12:22 PM

3 தளங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர் 4) நடைபெற்றது.

கோவை நீலாம்பூரில் 50 சென்ட் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட திமுக அலுவலகக் கட்டடத்திற்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

புதிய ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகம் 3 தளங்களைக் கொண்டதாக அமையவுள்ளது. இதன் அடித்தளத்தில் திருமண மண்டபம், முதல் தளத்தில் உணவுக்கூடம், மூன்றாம் தளத்தில் ஒருங்கிணைந்த திமுக அலுவலகம் மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவை கட்டப்படவுள்ளன. மேலும், பெரிய அளவில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான நிறுத்த இடமும் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, சாமிநாதன், செந்தில்பாலாஜி, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை மு.க.ஸ்டலின் பார்வையிட்டார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, இன்று மாலை கோவையில் கட்டப்பட்ட பிரம்மாண்ட நூலகத்திற்கு பெரியார் பெயர் சூட்டியதற்காக, திராவிடர் கழகம் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel