வங்கிக் கணக்கில் 10 ரூபாய்… டாஸ்மாக் காலி பாட்டில்களுக்கு டிஜிட்டல் ரீஃபண்ட்!

By Kavi

|

Published on 4 Nov 2026, 12:35 PM

தமிழ்நாட்டில் மதுபான காலி பாட்டில்களை பெற்றுக் கொள்வதற்காக நடைமுறையில் உள்ள பழைய பண பரிமாற்ற முறையை மாற்றிவிட்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் தொகையை வழங்கும் புதிய நடைமுறைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும்போது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை முறைப்படி திரும்ப ஒப்படைக்கும் போது நுகர்வோருக்கு அந்த தொகை திரும்ப வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் நிறுவ தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த மெஷினில் காலி பாட்டிலை செலுத்தினால் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பத்து ரூபாய் வரவு வைக்கப்படும். எனவே இனி மெஷின்களில் பணமாக வாங்க முடியாது. 

ADVERTISEMENT

அதாவது பாட்டில்களில் கியூஆர் கோடு பதிக்கப்பட்டு இருக்கும். தானியங்கி இயந்திரங்கள் மூலமாக காலி பாட்டில்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, நுகர்வோருக்குரிய ஊக்கத்தொகை டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். 

எந்த கடையில் பாட்டில் வாங்கப்பட்டது என்ற வரம்பு இன்றி அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் பாட்டில்களை திருப்பிக் கொடுக்கலாம். 

ADVERTISEMENT

க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய முடியாத அளவுக்கு சேதம் அடைந்து இருந்தால், அந்த பாட்டில் நிராகரிக்கப்படும். இதற்கான காரணமும் அந்த மிஷினில் தெரிவிக்கப்படும். 

இந்த புதிய நடைமுறைக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு படிப்படியாக அனைத்து கடைகளிலும் இந்த மெஷினை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுவரை டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாளர்கள் மூலம் காலி பாட்டில்களை கணக்கிட்டு ரொக்கமாக பணம் வழங்கும் முறையில் ஏற்பட்ட சிரமங்கள், சுகாதாரமற்ற சூழல் மற்றும் நடைமுறை சிக்கல்களை தவிர்க்க இந்த புதிய தொழில்நுட்ப முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

காலிபாட்டில்கள் கண்ட இடங்களில் வீசப்படுவதை தடுத்து அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கும் வெளிப்படை தன்மையுடன் நிர்வகிப்பதற்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த திட்டம் மாநில முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel