ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி.. சட்டென எகிறிய விலை நிலவரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 4 Nov 2026, 1:46 PM

Gold

சென்னையில் இன்று (நவம்பர் 4) பிற்பகலில் ஒரு சவரன் தங்கம் ரூ. 2,200 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றம் என பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் பிற்பகலில் கிலோவுக்கு ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.275 உயர்ந்து ரூ. 13100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற்பகலில் ஒரு சவரன் ரூ.2,200 உயர்ந்து ரூ. 1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் சென்னையில் இன்று காலை 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.240 உயர்ந்து ரூ.10,735 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,920 உயர்ந்து ரூ.85,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல் 14 கேரட் தங்கம் இன்று பிற்பகலில் ரூ.225 உயர்ந்து ரூ.8,635க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் ரூ.10 உயர்ந்து ரூ. 210க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 வரை உயர்ந்து ரூ. 2,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

3-11 -20261,02,400
2-11 -20261,02,200
1-11 -20261,01,840
31-10 -20261,01,840
30-10 -20261,04,320
29-10 -20261,05,560
28-10 -20261,05,560
27-10 -20261,05,080
26-10 -20261,04,680
25-10 -20261,04,560

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

3-11 -2026200
2-11 -2026200
1-11 -2026210
31-10 -2026200
30-10 -2026210
29-10 -2026215
28-10 -2026220
27-10 -2026220
26-10 -2026220
25-10 -2026220

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel