”வீட்டுக்கு வீடு தட்டேந்துகிற கட்சி, திமுக சோத்தை திண்ணுட்டு எதிர்த்து பேசுது காங்கிரஸ்”.. சீமான் தாக்கு!

Published On:

| By Mathi

முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான ஆட்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியை நாம் தமிழர் கட்சியின் (NTK) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று ஜூன் 6-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பேசியதாவது: இன்று மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் போயிருக்கார்.. எஞ்சி இருக்கிற 2 ஆண்டுகளில் அப்படி என்ன அவர் பேசுவார்?

ADVERTISEMENT

சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு காங்கிரஸ் ஓட்டு போடவில்லை. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற தவெக ஓட்டு போடவில்லை. ஆனால் தேர்தலுக்கு பிறகு இரண்டும் நல்ல ஒட்டு.

5 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு 2 அமைச்சர்கள் வாங்கி இருக்காங்க..
இப்ப கூடுதலா ஒரு மாநிலங்களவை சீட் வேற..

ADVERTISEMENT

அதாவது திமுக என்கிற வீட்டில் தட்டேந்தி 5 சீட்டு.. இப்ப தவெக என்கிற வீட்டில் தட்டேந்தி மாநிலங்களவை சீட்.. வீட்டுக்கு வீடு கையேந்தி பிச்சை எடுக்குறதுதான் காங்கிரஸ்.. தட்டேந்தி பிச்சை வாங்குறதுக்கும் காங்கிரஸ் செய்யுறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? எதுக்கு காங்கிரஸ்னு ஒரு கட்சி இருக்கனும்? அதெல்லாம் ஒரு கட்சி..

இப்ப தான் தெரியும் திமுகவுக்கு, ஏய்! அப்பவே ஒருத்தன் சொன்னானேயா, நம்ம கேட்கலையே…

ADVERTISEMENT

எங்க ஊரில் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் எம்.பி, ”ராஜீவ் காந்தியுடைய சொந்த சின்னத்தாய் மகன், அருமை சகோதரர் ராகுல் காந்திக்கு வெரி க்ளோஸ் ரிலேஷன்”.. மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என சொல்வது காங்கிரஸின் டிகே சிவகுமார்.. இங்க இருக்கிற காங்கிரஸ் என்ன செய்யுது?
மாணிக்கம் தாகூர் அவர்களே! உங்களுடைய தன்மானத்தை, உங்களுடைய கட்சியின் மீது இருக்கிற பற்றை நான் மதிக்கிறேன். ஆனால் நீங்கள் திமுக வாக்குகளால்தான் வெற்றி பெற்றீர்கள்.. 2000 வாக்கு வித்தியாசத்துல தான் தேமுதிக வேட்பாளர் தம்பி விஜய் பிரபாகரனை தோற்கடித்தீர்கள். அதெல்லாம் நான் வெற்றியாகவே கருதல.

இப்ப நீங்க உங்க எம்.பி.பதவியில் இருந்து விலகிவிட்டு திமுகவை கடுமையாக சாடுங்க, தவெக கூட்டணியில வந்து நில்லுங்க, போட்டி போட்டு வெல்லுங்க, என்ன வேணாலும் பேசுங்க.

என் வீட்டுச் சோற்றை தின்னுட்டு (திமுக கூட்டணியில் இருந்துவிட்டு 5இடங்களில் வென்றுவிட்டு) உடம்பை வளர்த்துக்கிட்டு, என்னை எதிர்த்து பேசுறது எல்லாம் எவ்வளவு அநாகரிகம்? பூத் ஏஜெண்ட் போட கூட காங்கிரஸூக்கு ஆட்கள் இல்லை..
காங்கிரஸ் கட்சி தனியா நின்று போட்டியிட்டு டெபாசிட் தொகை வாங்கிடுமா? நான் தோத்துட்டேன்தான்.. ஆனா 4 விழுக்காடு வாக்கு வைத்துள்ளேன்.. காங்கிரஸ் வென்றால் கூட அத்தனை விழுக்காடு வாக்கு வருமா? இவ்வாறு சீமான் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share