டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நித்தி ஆயோக் கூட்டம்.. முதல்வர் விஜய் பங்கேற்பு!

Published On:

| By Mathi

NITI Aayog: PM Modi to Chair, CM Vijay to Participate

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலைமையில் நித்தி ஆயோக்கின் (NITI Aayog) 11-வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று ஜூன் 11-ந் தேதி நடைபெற உள்ளது.

“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடையும் நோக்கில் அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான அணுகுமுறை குறித்து இந்த நிர்வாகக் குழு கூட்டம் விவாதிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும்

  • அடித்தள மனித மூலதனமும் எதிர்காலத்திற்குத் தயாரான திறன்களும்;
  • வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி;
  • சுகாதாரம், ஊட்டச்சத்து, நல்வாழ்வு
  • சமத்துவம், கண்ணியம்

ஆகியவற்றின் அடிப்படையில் ஆலோசனை நடைபெறும்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், தொழில்முனைவை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டை அதிகரித்தல், நாடு முழுவதும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share