“ஜோசப் விஜய் Bro.. 3 வயது குழந்தைக்கு யார் பதில் சொல்லுவாங்க Bro?” – தவெக அரசை வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Nainar

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் கூறி, தமிழக அரசைக் கண்டித்து வரும் 18-ஆம் தேதி சென்னையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் Bro. இந்த மூன்று வயது குழந்தையைப் பாருங்கள் Bro. அங்கிள். அங்கிள் என்று நரம்பு புடைக்க பேசுறீங்களே Bro. திரு. ஜோசப் விஜய் Bro. இந்த மூன்று வயது குழந்தைக்கு யார் பதில் சொல்லுவார்கள்? பெரம்பூர்ல ஏழு வயது படிக்கிற மாணவிக்கு யார் பதில் சொல்லுவார்கள்? சொல்லுங்க Bro. ஜோசப் விஜய் Bro.

ADVERTISEMENT

எம்எல்ஏ வர்றார். மிரட்டுகிறார். யாருடைய ஆட்சியில்? எத்தனை நாள் உங்களுடைய ஆட்சி தாங்கும்? மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டாமா? மக்களைப் பற்றி உங்களுக்குக் கவலை இருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க நடவடிக்கை எடுத்திருப்பார்களா.. இல்லையா?

எவ்வளவு பெரிய மனக்கஷ்டம். எல்லார் வீட்டிலும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்று வயது பச்சிளம் குழந்தை. இதற்கு காரணம் போதைப்பொருட்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறை சரியில்லை. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பெண் காவலர். மூன்று போலீஸ் காவல்துறையினரே பலாத்காரம் செய்கிறார்கள். சொல்லுங்க Bro. Bro. ஜோசப் விஜய் Bro. காது கேக்குறதா உங்களுக்கு. திருச்சியில் நன்றி அறிவிப்பு சொல்லும்போது நரம்பு புடைக்க பேசுறீங்க. ஒரு முதலமைச்சர் நன்றி அறிவிப்பு சொல்லும்போது என்ன சொல்ல வேண்டும்? இதற்கு யார் பதில் சொல்லுகிறார்கள்? பக்கத்துல தான் இருக்கிறது.

ADVERTISEMENT

பதினெட்டாம் தேதி நீங்கள் சட்டமன்றத்தை துவக்க இருக்கிறீர்கள். 18ம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னையில் இதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இது கட்சி பாகுபாடு இன்றி, மதபாடு இன்றி, இன பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது மாதிரி விஷயங்களை லேசாக விட்டுவிடக் கூடாது. இந்த ஆட்சி ஒரு விஷக் கிருமி. இந்த முதலமைச்சர் முதுகெலும்பில்லாத முதலமைச்சர். சட்டத்தைக் கையிலெடுத்து சட்டத்தைப் பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் உடனடியாக ராஜினாமா பண்ண வேண்டும்.” என தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share