தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், இன்று (ஜூன் 15) 56 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக டிஐஜியாகவும்,

ADVERTISEMENT

சென்னை காவல்துறை தலைமையக துணை ஆணையர் பாலகிருஷ்ணன், சென்னை காவல்துறை சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராகவும்,

சென்னை மத்திய குற்றப்பிரிவு III, டிசிபி ஆரோக்கியம், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை எஸ்பி/ உதவி ஐஜி ஆகவும்,

ADVERTISEMENT

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் வனிதா, ஆவடி காவல் ஆணையரக டிசிபி ஆகவும் 

சென்னை காவல்துறை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன எஸ்பி ஆகவும்,

புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார், சென்னை காவல் வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும், 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும் 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டீபன்ஜேசுபாதம்,  சென்னை மத்திய குற்றப்பிரிவு III துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதுபோன்று பல்வேறு மாவட்ட எஸ்பிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் எஸ் பி விவேகானந்த சுக்லா, கடலூர் எஸ்பி ஆகவும் 

விழுப்புரம் எஸ்பி சாய் பிரனீத், திருவள்ளூர் எஸ்பி ஆகவும், 

கடலூர் எஸ்பி ஜெயக்குமார், திண்டுக்கல் எஸ்பி ஆகவும் 

திருவண்ணாமலை எஸ்பி சுதாகர், என்ஆர்ஐ பிரிவு எஸ்பி ஆகவும், 

மதுரை வடக்கு டிசிபி மதிவாணன், விழுப்புரம் மாவட்ட எஸ் பி ஆகவும், 

சேலம் எஸ்பி கௌதம் கோயல், விருதுநகர் எஸ்பி ஆகவும் 

நாமக்கல் எஸ்பி விமலா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆகவும்

சென்னை காவல்துறை தலைமையக எஸ்பி/ உதவி ஐஜி அருண் கபிலன் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆகவும், 

தர்மபுரி எஸ்பி மகேஸ்வரன், கோயம்புத்தூர் நகர போக்குவரத்து டிசிபி ஆகவும்

கிருஷ்ணகிரி எஸ் பி தங்கதுரை கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் ஐபிஎஸ், திருநெல்வேலி நகர கிழக்கு துணை ஆணையராகவும் 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரபாகர் ஐபிஎஸ் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share