நீண்ட மாதங்களுக்கு பிறகு டி 2௦ தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடி இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் பாதியில் தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் இந்திய அணிக்கு இன்னும் திரும்பவில்லை. அவர் மீண்டும் முழு உடற்தகுதியை எட்டி எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? என்னும் கேள்விக்கு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தநிலையில் மும்பையில் நடைபெறும் டி.ஒய்.பாட்டில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடி இருக்கிறார். இதில் மும்பை ரிலையன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கிய ஹர்திக் பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Glad to be back doing what I love 🤙 pic.twitter.com/vXlmWANJhs
— hardik pandya (@hardikpandya7) February 26, 2024
முதலில் களமிறங்கிய பெட்ரோலியம் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ரிலையன்ஸ் அணியின் வெற்றியை பியூஸ் சாவ்லா உறுதி செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் இந்த போட்டியில் 3 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதேபோல கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கி 3 ரன்களை எடுத்தார். போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னுடைய வரவை அவர் அறிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ”நீங்க எடுத்த 3 ரன்னுக்கு 4 புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறீர்கள்” என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கல்கி’ திரைப்படத்தின் கதை இது தான் : இயக்குநர் நாக் அஸ்வின்
