அதிமுக டூ தவெக… மின்னல் வேகத்தில் கட்சி தாவிய எம்எல்ஏக்கள் – இன்பதுரை எம்.பி காட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Inbadurai

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பாகவே, அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது 100 சதவிகிதம் குதிரை பேரம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் இன்று (மே 25) தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

ADVERTISEMENT

ராஜினாமா கடிதத்தை அளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, மூன்று பேரும் தலைமைச் செயலக வளாகத்திலேயே தவெக முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்த விவகாரம் குறித்து அதிமுக நிர்வாகியும் எம்.பி.யுமான இன்பதுரை தனது ‘எக்ஸ்’ பதிவில், “மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பதற்கு முன்பே, அவர்கள் மூவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை அவசரமாகச் சந்தித்துள்ளனர். எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் முன்பே திட்டமிடப்பட்டவை. இது 100 சதவீதம் குதிரை பேரமே ஆகும்.”தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share