நம்பிக்கை வாக்கெடுப்பில் தவறு நடந்துவிட்டது… வருத்தம் தெரிவித்து எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Kavi

அதிமுக கட்சிக்குள் தேர்தல் முடிந்த பிறகு பிளவு ஏற்பட்டுள்ளது.  சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கடிதம் கொடுத்தனர். 

தொடர்ந்து அந்த கடிதத்தின் நகலை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து வழங்கினர். 

ADVERTISEMENT

இதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “இன்றைக்கு எங்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஒன்று கூடி,   சட்டமன்றத்தினுடைய தலைவராக எடப்பாடியை தேர்ந்தெடுத்தோம். 

 நடைபெற்ற வாக்கெடுப்பிலே ஏற்பட்ட சில தவறுகளுக்கு வருந்தி,  எடப்பாடி பழனிசாமியிடம் நாங்கள் கடிதத்தை கொடுத்து, அதனுடைய நகலை நம்முடைய சட்டமன்றத்தினுடைய தலைவர் சபாநாயகரிடமும் அளித்தோம். 

ADVERTISEMENT

வருகின்ற காலத்திலே நாங்கள் ஐந்து பேரும்,  எங்களுக்கு முன்னிருக்கின்ற எல்லா சட்டமன்ற உறுப்பினரும் சேர்ந்து எடப்பாடியாருடைய தலைமையிலே செயல்படுவதாக கூறிவிட்டு இங்கு வந்திருக்கின்றோம்” என்றனர். 

அதன்பின்னர், செய்தியாளர்கள், சபாநாயகர் என்ன சொன்னார் என்று கேள்வி எழுப்பினர். 

ADVERTISEMENT

இதற்கு அவர்கள்,  அதெல்லா பிறகு தெரியும். நாங்கள் கடிதம் மட்டும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். 

வாக்கெடுப்பில் தவெகவுக்கு  ஆதரவாக வாக்களித்திருக்கிறீர்கள்… அதற்கான நடவடிக்கைகள் என்ன?

அதுக்குதாங்க கடிதம் கொடுத்திருக்கோம். எங்களுடைய பொதுச்செயலாளரிடம் கொடுத்திருக்கோம். அதனுடைய நகல்தான் இன்னைக்கு வந்து நாங்க சபாநாயகர்கிட்ட கொடுத்திருக்கோம். 

அற்காடு  எஸ். எம். சுகுமார்,  அந்தியூர் ஹரிபாஸ்கர்,  சங்கரன்கோவில் ஜெய்சங்கர்,  காங்கேயம் எம். எஸ். நடராஜன், பண்ருட்டி மோகன்  ஆகியோர்  கடிதம்  கொடுத்தோம் “என்று தெரிவித்தார்கள். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share