NDA முதல் பிரசார கூட்டம்.. சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் சென்ற மோடி

Published On:

| By Mathi

Modi Chennai

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசரா கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல் பொது பிரசார கூட்டம் சற்று நேரத்தில் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்தார் மோடி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் சென்றடைந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share