முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published On:

| By Mathi

Rajya Sabha Election 2026

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்-க்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சிவகாசியில் நேற்று ஜூன் 21-ந் தேதி இரவு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 1 மணிநேரம் இடைவிடாமல் ”வாண வேடிக்கை” நடத்தப்பட்டது. இதில் வண்ண வண்ண பட்டாசுகள் வானில் வெடித்து சிதறின. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

முதல்வர் விஜய்க்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி: முதல்வர் ச.ஜோசப் விஜய்-க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.

ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.: தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய்-க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: முதல்வர் விஜய்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் விஜய், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி: 52-ஆவது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்-க்கு, புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான தருணத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு, வருங்காலம் மிகவும் சவாலானதாகவே இருக்கும். தாங்கள் பல்லாண்டுகள் நல்ல உடல் நலத்தோடும் உள்ள நலத்தோடும் விளங்கி, தமிழக மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றிட வாழ்த்துகிறேன்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share