அமைச்சர் சரத்குமாரின் புதிய வீடியோ வைரல்!

Published On:

| By Mathi

Minister Sarathkumar Faces Social Media Heat Over New Viral Video

போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியிருக்கும் தமிழக அமைச்சர் ‘கில்லி’ சரத் என்ற சரத்குமாரின் இன்னொரு சர்ச்சை வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஐபிஎல் போட்டி நடைபெற்ற போது மைதானத்தில், அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

ADVERTISEMENT

ஆனால் ”தாம் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஒன்றரை வயது குழந்தைக்காக மாத்திரையை உடைத்த போது எடுக்கப்பட்ட வீடியோ அது” என விளக்கம் தந்தார் அமைச்சர் சரத்குமார். அமைச்சரின் இந்த விளக்கமும் சோசியல் மீடியாவில் டிரோல் மெட்டீரியலாகிவிட்டது.

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று ஜூன் 29-ந் தேதி கண்டன போராட்டம் நடத்தினர். அப்போதும் திமுகவினர், “ஏடிஎம் கார்டு, ரூ500 நோட்டுகளை” வைத்து அமைச்சர் சரத்குமாரை கிண்டல் செய்து வீடியோ பதிவிட்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் அமைச்சர் சரத்குமாரின் வீடியோ என ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடலில் குளிக்கும் அமைச்சர் சரத்குமார் கையில் ”ஒரு டிரிங்ஸ் டின்” இருக்கிறது.

இந்த “டின் டிரிங்ஸ்” கூல்டிரிங்ஸா? அல்லது வேறு ‘டானிக்கா” என்ற கேலிகளுடன் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் அமைச்சர் சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி தலையிடலாமா? என அவரது ஆதரவாளர்கள் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் சரத்குமார் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

அமைச்சர் சரத்குமாரின் இன்னொரு வைரல் வீடியோ

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share