இந்தியாவுக்கு நோபல் பரிசு வாங்கி கொடுத்த அமர்த்தியா சென் பத்தி இன்னைக்கி ஏதேதோ நியூஸ் பரவ… ஊரறிஞ்ச பல பெரிய மனுசங்க அவருக்கு இரங்கல் தெரிவிச்சு ட்விட்டும் போட்டாங்க. கொஞ்ச நேரத்துல அய்யோ எங்க அப்பா நல்லா இருக்காரு அப்படின்னு அந்த மகராசனோட பொண்ணு சொன்னதும்… அவசர அவசரமா அவர் வாழறதுக்கும் வருத்தம் தெரிவிக்கிறாங்க.
ஏதாவது ஒரு செய்தியை அது சரியா தப்பா உண்மையா பொய்யா நல்லதா கெட்டதா எதுவுமே தெரியாம அவங்க அவங்க குட்டி சுவர்ல எழுதி ஒட்டிக்கிறாங்க. ஒவ்வொரு நிமிஷமும் ஏதாவது புதுசா கொடுக்கணும்னு டிவி சேனல்களும் அலையுறாங்க.
வாட்ஸ் அப்புக்குள்ளேய வாழுற இவங்களையெல்லாம் காசாவுல போயி காலாற நடந்துட்டு வர சொல்லணும்.
நீங்க உண்மையான அப்டேட்ஸ் பாருங்க…
ச்
ℳsd ❝இதயவன்❞
பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க முடிவு: காங்கிரஸ்
காங்கிரஸ் ல உள்ள தலைவர்களை எப்ப ஒன்றிணைப்பீங்க?!

மித்ரன் ????.????????????.????????????
என்ன திடீர்னு இஸ்லாமியர்கள் மேல இம்புட்டு அக்கறை.. என்ன காரணம்?
~ CAA, NRC மசோதாக்கு ஆதரவளித்தோம் ஒரு பாயும் ஓட்டு போடல.. நாடாளுமன்ற தேர்தல் வேற வருது அதான் காரணம்?!

Mannar & company
பாட்டி கூடவே இருந்துடுப்பா நீ வேலை பாக்குற இடத்தில் சண்டை நடக்குதாமே போகாதப்பா..
அய்யோ பாட்டி சண்டை நடக்குறது இஸ்ரேல்ல நான் வேலை பார்க்கிறது இஸ்ரோல!!

mohanram.ko
ஜி – நிறைய பேர் மணிப்பூரை பற்றி பேசலையேனு நினைக்கறாங்க, ஆனா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானா வளரும், அதனால்தான் இஸ்ரேல்ல அமைதி வரணும்னு நினைச்சா மணிப்பூர்ல அமைதி தானா வரும், இது நிறைய பேருக்கு தெரியாது…
balebalu
ஒழுங்கானது என்று நினைத்து கொண்டிருந்த பிம்பத்தை சல்லி சல்லியாக நொறுக்கி தள்ளவும்
ஒழுங்கற்றது என்று நினைத்து கொண்டிருந்த பிம்பம் முற்றிலும் மாறுபட்டு பிரகாசிப்பதையும்
முன்பு காலம் செய்தது
இப்போ ” கேமரா ” செய்கிறது
-bigbosstamil7
இப்படித்தான் நெறைய பேரு பைத்தியம் ஆகிட்டாங்க pic.twitter.com/NUkFzTFRMI
— myck (@smbsultan) October 10, 2023
லிட்டில் கிருஷ்ணா
உனக்கு சந்தோஷமா இருந்தா என்ன வரும்?
லைட்டா சிரிப்பு வரும். நம்பிக்கை வரும்..
எனக்கு ஏதோ ஆப்பு வரப் போகுதுன்னு சந்தேகம் வருது.

கோழியின் கிறுக்கல்
தேர்வு முடிந்து வரும் பொழுது ‘எத்தனை மார்க் வரும்’ எனக் கேட்பவன் நண்பன்!!
‘மச்சி தேறுமா!?’ எனக் கேட்பவன் உயிர் நண்பன்!!!

ℳsd ❝இதயவன்❞
ஹிந்து மதத்தை ஆதரிக்கும் கட்சி திமுக:அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சேகர் அங்கிள் தேர்தல் வந்துருச்சா?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
