மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: உத்திரட்டாதி!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

(16.12.2024 முதல் 13. 1.2025)

ADVERTISEMENT

கவனமாகச் செயல்பட்டால், கஷ்டங்கள் நீங்கும் காலகட்டம். அலுவலகத்தில் நேரடி கவனமும் நேரம் தவறாமையும் இருந்தால், திறமைக்கு உரிய உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள்.

சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் உழைப்புக்குப் பரிசாகவே கிட்டும்.

ADVERTISEMENT

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வரவை சேமிக்கப் பழகுங்கள். குலதெய்வத்தைக் கும்பிட்டால், வாரிசுகள் வாழ்வில் நல்லவை நடக்கும்.

செய்யும் தொழிலில் உங்கள் உழைப்பே லாபத்தை ஈட்டும். ரியல் எஸ்டேட், பங்குவர்த்தகத்தில் அவசரம் வேண்டாம்.

ADVERTISEMENT

அரசியலில் இருப்பவர்கள் அடக்கத்தால் அதீத நன்மை பெறலாம். பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள்.

அரசுத்துறையில் உள்ளோர் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். புறம்பேசுவோரை புறக்கணியுங்கள்.

மாணவர்கள் மறதியை விரட்ட, தினம்தினம் படியுங்கள். படைப்பாளிகளுக்கு திறமை பளிச்சிடும். அயல்நாடு செல்வோர். சட்டதிட்டங்களை தவறாமல் கடைபிடியுங்கள்.

பயணத்தில் அவசரம் கூடாது. வயிறு,எலும்பு,மூட்டு, ரத்தநாள உபாதைகள் வரலாம். சிவன்,பார்வதி வழிபாடு சிறப்பு சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?

‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!

”பாஜக மீது எடப்பாடிக்கு பயமும் அதிகம்… பாசமும் அதிகம்” : கே.என்.நேரு விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share