-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
அமைதியாகச் செயல்பட்டால் ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமையான உழைப்பே மேன்மை தரும். எல்லாம் தெரியும் என்ற எண்ணம், ஒருபோதும் கூடாது.
பிறரைக் குறை சொல்வது, உங்களுக்கே எதிர்மறையாக மாறிவிடலாம், பணத்தைக் கையாள்வதில் நிதானம் முக்கியம்.
வீட்டில் விசேஷங்கள் வரக்கூடிய அறிகுறிகள் தெரியும். வீண் ரோஷத்தால் உறவுகளை உதறவேண்டாம். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள்.
ஆண் பெண் நட்பில் அதிக நெருக்கம் வேண்டாம். தரல் பெறலில் நேரடி கவனம் முக்கியம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.
செய்யும் தொழிலில் முயற்சிகளுக்கு ஏற்ப லாபம் வரத்தொடங்கும். வர்த்தகம் சார்ந்த அனுமதிகளைப் பெறுவதில் அலட்சியம் கூடாது.
அரசியலில் இருப்பவர்கள் வீண் வாக்குறுதிகளைத் தவிருங்கள். மேலிடத்தின் அனுமதி பெறாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம். அரசுத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவீர்கள். பணவிஷயத்தில் கவனமாக இருங்கள்.
படைப்புத் துறையினர் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிபெறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரவும் வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் மறதிக்கு இடம்தராமல் இருப்பது முக்கியம். வாகனப்பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள்.
ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, தொற்று உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு ஆனந்தம் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
5 கி.மீ தொலைவு ஓட்டம்… 30 விநாடியால்… ஆயுதப்படை போலீஸ் எடுத்த முடிவு!
தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!
தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன?
2023-24-ம் ஆண்டில் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை இத்தனை கோடிகளா?
சிறைகளில் முறைகேடு: வழக்கு பதிவில் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!