குரூப்-1 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

TNPSC exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – I (தொகுதி I பணிகள்) -க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (23.06.2026) வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்களின் எண்ணிக்கை 26

ADVERTISEMENT

துணை ஆட்சியர்-12
உதவி ஆணையர்-2
தொழிலாளர் நல உதவி ஆணையர் – 1
மாவட்டப் பதிவாளர் – 8
கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் – 3

உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாக செலுத்த வேண்டும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும். மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கான கூடுதல் விவரங்கள், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான தகவல்களைத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in இல் தேர்வர்கள் விரிவாக அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share