சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று ஜார்ஜியா. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக, இந்தியர்கள் ஏராளமான பேர் இந்நாட்டுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள குதாவ்ரி பகுதியில் மலையின் மீது இந்தியருக்கு சொந்தமான ஹவேலி என்ற ரிசார்ட் அமைந்துள்ளது. இங்கு 11 இந்தியர்களும் ஒரு ஜார்ஜியா நாட்டுக்காரரும் பணியாற்றி வந்தனர். இந்த ரெஸ்டாரன்ட்டில் இந்தியா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், அரபு நாட்டு உணவு வகைகள் கிடைக்கும். அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் இந்த ஹோட்டலுக்கு வந்து விரும்பி உணவு அருந்துவார்கள். ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில் இருந்து 120 கி.மீ தொலைவில் இந்த ரெஸ்டாரன்ட் அமைந்துள்ளது.
கடந்த 14 ஆம் தேதி இரவில் இந்த ரெஸ்டாரன்டின் இரண்டாம் தளத்தில் அங்கு பணி புரிந்த அனைவரும் உறங்கியுள்ளனர். அப்போது கரண்ட் கட்டாகியுள்ளது. இதனால், ஆயில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டுள்ளது. படுக்கை அறையை ஒட்டி அமைந்துந்திருந்த இந்த ஜெனரேட்டரில் இருந்து கார்பன்டை மோனாக்சைடு வெளியேறியதாகவும், அதனால் அங்கு அறையில் உறங்கிக் கொண்டிருந்த 12 பேர் உயிரும் உறக்கத்திலேயே உயிரிழந்ததாக சொல்கிறார்கள். மீட்கப்பட்ட இறந்தவர்களின் உடலில் எந்த காயங்களும் காணப்படவில்லை.
இதனையடுத்து இந்திய தூதரகம் வழியாக இறந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜார்ஜியாவில் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் மருத்துவ படிப்புக்காக செல்கிறார்கள். கிட்டத்தட்ட 11 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கு படிக்கின்றனர்.
பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலான ஹோட்டல்களை நடத்துகிறார்கள். தற்போது, இந்த ரெஸ்டாரன்ட் உரிமையாளர் மீது , man slaughter என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது அலட்சியம் காரணமாக இருவருக்கு மேல் உயிர் இழப்பை ஏற்படுத்தினால் இத்தகைய பிரிவின் கீழ் ஜார்ஜியாவில் வழக்கு பதியப்படும். இதனால், அவருக்கு 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்