திட்டமிட்டுச் செயல்பட்டால், தித்திக்கும் காலகட்டம். அலுவலத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கைகூடி வரும். யாருடைய கட்டாயத்துக்காகவும் கோப்புகளைப் படிக்கா மல் கையெழுத்திட வேண்டாம்.
புதிய பணி வாய்ப்பு திறமைக்கு ஏற்ப அமையும். உடனிருப்போர் ஆலோசனைகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள்.
குடும்பத்தில் சந்தோஷம் இடம்பிடிக்கும். அது நிலைக்க விட்டுக்கொடுத்தல் நல்லது. வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளிடம் கடுமை தவிருங்கள்.
சுபகாரியங்களை முன் நின்று நடத்தும் சந்தர்ப்பம் வரும். அசையும் அசையா பொருள் சேரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு.
நேரான செயலும் நேர்மையும் முக்கியம். கடன்களை ஆடம்பரத்திற்கு வாங்க வேண்டாம்.
அரசியலில் உள்ளவர்கள் வார்த்தைகளில் நிதானமாக இருங்கள். கூடா நட்பை உடனே உதறுங்கள்.
அரசுத்துறையில் இருப்போர்க்கு நன்மைகள் அதிகரிக்கும். பலகால எதிர்பார்ப்புகள் ஈடேறத் தொடங்கும்.
கலைஞர்கள், படைப்பாளிகள் சின்சியராகச் செயல்படுவது முக்கியம். எதிர்பாலரிடம் எல்லைவகுத்துப் பழகுங்கள்.
மாணவர்கள் எண்ணம்போல் ஏற்றம் உருவாகும். தொலைதூரப் பயணத்தை தனியே மேற்கொள்ள வேண்டாம்.
அஜீரணம், அல்சர், நெஞ்செரிச்சல், காய்ச்சல் உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
5 கி.மீ தொலைவு ஓட்டம்… 30 விநாடியால்… ஆயுதப்படை போலீஸ் எடுத்த முடிவு!
தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!
தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன?
2023-24-ம் ஆண்டில் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை இத்தனை கோடிகளா?
சிறைகளில் முறைகேடு: வழக்கு பதிவில் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!