ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளது.
நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாவாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று (டிசம்பர் 17) தாக்கல் செய்தார்.
அதற்கு மக்களவையில் உள்ள திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு முதல் கட்சியாக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
5 கி.மீ தொலைவு ஓட்டம்… 30 விநாடியால்… ஆயுதப்படை போலீஸ் எடுத்த முடிவு!