நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட பார்வதி யானை!

Published On:

| By Selvam

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் பார்வதி யானை குளித்து மகிழ்ந்து விளையாடும் வகையில் ரூ.23.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட குளியல் தொட்டியினை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஏப்ரல் 16) திறந்து வைத்தார்.

இந்த நீச்சல் குளத்தில் யானை உற்சாகமாக ஓடி ஆடி மகிழ்ந்து விளையாடியது.

பின்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு ஏற்பட்ட கண் பிரச்சனை மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

madurai meenatchi amman temple elephant in river pool

தொடர்ச்சியாக யானை சிமெண்ட் தரையில் நிற்பதால் அதன் எலும்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனை தீர்க்கும் விதமாக மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதில் பார்வதி யானை ஆனந்தமாக விளையாடியதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள்.

madurai meenatchi amman temple elephant in river pool

இதன் மூலம் யானை பார்வதிக்கு எலும்புகளில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும்.

மேலும் உடலில் ஏற்பட்ட புண்கள் அதற்கான மருந்துகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

யானைக்கு கண் அறுவை சிகிச்சை செய்தால் அறுவை சிகிச்சைக்கு பிறகு யானையை பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால் மருந்துகள் கொடுத்து கண் பிரச்சனை மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

ராமலிங்கம்

சூர்யா 42: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய “கங்குவா”

மதுபான ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share