மதுபான ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்!

Published On:

| By Selvam

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஏப்ரல் 16) ஆஜரானார்.

டெல்லியில் 2021-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

arvind kejriwal arrives cbi headquarters

டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

arvind kejriwal arrives cbi headquarters

இந்தநிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்காக ஆஜரானார். முன்னதாக காந்தி நினைவிடத்திற்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காஷ்மீரி கேட் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் செய்து வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளதால் சிபிஐ அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை வரை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

தீ பரவட்டும்: கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்

அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில்லும் சந்தேகங்களும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share