மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா இன்று (டிசம்பர் 16) காலை முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
மார்கழி மாத அஷ்டமி சப்பர திருவிழாவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் மதுரை நகர் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் சுந்தேரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் தனித்தனியாக கோவிலில் இருந்து தீப ஆராதனை செய்யப்பட்டு இரண்டு சப்பர தேர்களில் தனித்தனியாக அமரவைக்கப்பட்டனர்.
இந்த தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். மீனாட்சி அம்மனுடைய தேரை பெண்கள் மட்டுமே இழுத்து செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர்.
கீழ மாசி வீதியில் துவங்கிய சப்பர தேர், நான்கு மாசி வீதிகளிலும் சுற்றிய பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடையும்.
தேரிலிருந்து சிதறி விழும் அரிசியை எடுப்பதற்கு அங்கிருக்கக்கூடிய பக்தர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த அரிசியை வீட்டில் எடுத்து வைத்தால் குடும்பங்களில் எந்தவித பசி பிரச்சனையும் இருக்காது என்பது பக்தர்களுடைய ஐதீகம்.
அஷ்டமி சப்பர திருவிழாவால் மதுரை மாநகரம் இன்று காலை முதல் விழாக்கோலம் பூண்டுள்ளது.
செல்வம்
ஆளுநருக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!