– சே.த.இளங்கோவன்
‘என்னுடைய சிந்தனை எல்லாம் எம் மக்களை மேம்படுத்துவதுதான். அதிகாரம் தொட்டு அனைத்திலும்அனைத்துப் பிரிவினருக்கும் பங்கு எனும் ஜனநாயகம்தான் எனது கொள்கை’. இந்தக் கோட்பாட்டின்மீது அமர்ந்துதான் 1989ல் பாமக எனும் புதிய படகை உருவாக்கி, தனது தேர்தல் அரசியலில் முதல்பயணத்தைத் தொடங்கினார் மருத்துவர் ராமதாஸ். மீண்டும் தொடங்கிய இடத்துக்கே அந்தப் படகுவந்து சேர்ந்துள்ளது. ‘தனித்துப் போட்டியிடுவோம்’ என்று 1991ல், 194 இடங்களில் போட்டியிட்ட பாமகஇன்று, 2016ல் அதே புள்ளியில் இருந்து தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறது. இம்முறைபடகோட்டியாக இருந்து இந்தப் படகை இயக்குவது மருத்துவர் ராமதாஸின் மகன் மருத்துவர்அன்புமணி.
‘கடந்த காலத்தில் நாங்க பல ஏற்ற இறக்கங்களை சந்திச்சது என்னவோ உண்மைதான். ஆனால்இம்முறை புதிய பாய்ச்சலோடு எங்க பயணத்தைக் கொண்டுசெல்ல இருக்கிறோம். நீண்டகாலதிட்டத்துக்கான வலுவான அடித்தளம் அமைக்க இந்தத் தேர்தலை, எங்களை நிரூபிக்கும் களமாகப்பயன்படுத்திக்கொள்ள இருக்கிறார் அன்புமணி. மரபார்ந்த வழிமுறைகளும், நவீன பாணிஅணுகுமுறைகளும் என வெற்றிக்கான திட்டங்களும், ஹைடெக் வியூகங்களும் அவரின் ஐ போனில்தெளிவாக இருக்கின்றன’ என நம்பிக்கையோடு பேசும் தைலாபுரத்துக்கு நெருக்கமானமேல்மட்டத்தினர் இத் தேர்தலுக்கான தயாரிப்புப் புள்ளியில் இருந்து விரிவாக நம்மிடம் விளக்கினர்:
‘ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய சொந்த பலத்தை நிரூபிக்கக்கூடிய முக்கியதேர்தல்தான் இது. அதையொட்டி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணி பிரச்சாரத்தைத்தொடங்கியிருக்க, இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கவேண்டும் நம்முடைய வழி’ என ஒருஆண்டுக்குமுன்பே திட்டமிட்டுவிட்டார் அன்புமணி. தொடர்ந்து மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களைஅழைத்து மீட்டிங் போட்டார்.
‘வரப்போகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம்?’ என்றார்.
மாதிரி பட்ஜெட், புதிய திட்டங்கள், விஞ்ஞான வகைப்பட்ட நிர்வாக முறை என பல விஷயங்களைநம்மைப்போல அணுகிய கட்சிகள் இல்லை. இதில், நமக்கு பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் ஆதரவானபார்வையை உருவாக்கியுள்ளது. மற்ற கட்சித் தலைவர்கள் பேசுகிறார்களோ, இல்லையோ! மக்கள்பிரச்சினைகளை ஒட்டி நாள்தோறும் அறிக்கைகள் கொடுக்கத் தவறியதில்லை நம்ம மருத்துவர் அய்யா.ஆனாலும் முழுமையான வாக்குகளை நாம பெற இயலாமல் போவதற்குக் காரணம்,
நம்மீது வைக்கப்படும் இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகள்:
1. சாதிக் கட்சி
2. அடிக்கடி கூட்டணி மாறும் கட்சி
இதை மாற்ற முயற்சித்தால் மட்டுமே நமக்கு எதிர்காலம் உண்டு’ என, வெளிப்படையாகவேபேசினோம்.
‘அப்படியென்றால், தனித்து நின்றால் நம்மால் இழந்த செல்வாக்கைப் பெறமுடியுமா?’ என்றார்அன்புமணி.
‘முடியும்’ என்ற எங்கள் நிர்வாகிகள், முந்தைய தேர்தல் வரலாற்றை விளக்கினர்.
1991ல் அடித்த ராஜீவ்காந்தி அனுதாப அலையிலும் நாம் ஒரு இடத்தில் வென்றோம். அதன்பின், 1996ல்ரஜினி ஆதரவு, திமுக மூப்பனார் கூட்டு என இந்த அலையிலும் நாம் பென்னாகரம், தாரமங்கலம்,எடப்பாடி, ஆண்டிமடம் என 4 இடங்களில் வென்றோம். அது மட்டுமல்ல; அரக்கோணம், சோளிங்கர்,திண்டிவனம், புவனகிரி, விருதாச்சலம், மேட்டூர், ஜெயங்கொண்டம் என ஏழு தொகுதிகளில் ஆளும்கட்சி அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு வந்தோம். அதன்பின், கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து 1999ல் 8.22% ஆக உயர்ந்த நம் வாக்கு வங்கி, அதன்பின் சரியத் தொடங்கியது.அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, கூட்டணியை அடிக்கடி மாற்றியது. நாம் தொடர்ந்து ஐந்துவிழுக்காடு வாக்குகளைப் பெற்றாலும் அதிக தொகுதிகளையும் வெல்ல முடியவில்லை. நம்முடையவாக்குகள் கூட்டணிக் கட்சிக்குச் சென்றஅளவு அவர்களின் வாக்குகள் நமக்கு வரவில்லை. அதேசமயம்,நம் வாக்கு வங்கி குறைந்ததால் தற்போது நம் மாம்பழச் சின்னத்தையும் இழந்தோம். தற்போது, இந்தத்தேர்தலுக்கு மட்டும் மாம்பழச் சின்னத்தை கோர்ட்மூலமே மீட்டுள்ளோம். நம் மாம்பழத்தைதக்கவைக்கவும்கூட, தனித்துப் போட்டியிட்டால்தான் நம்மால் வெல்ல முடியும். பரவலாக வாக்குவாங்க முடியும்’ என்றனர் புள்ளிவிவரங்களோடு.

இவ்வகையான சந்திப்புகளுக்குப் பிறகே கூட்டணி வேண்டாம் என முடிவெடுத்தது கட்சித் தலைமை.இதையொட்டி, தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ், காடுவெட்டி குரு, கோ.க.மணி உட்படமுக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார் அன்புமணி. ‘நாடாளுமன்றத்தேர்தலைப்போலவே முழுக்க முழுக்க அன்புமணியையே முன்னிலைப்படுத்தலாம். அதற்கானபிரச்சார பாணி எப்படி இருக்கலாம்? என்று பேச்சு படர்ந்தது. ’நோட்டீஸ் கொடுக்கணும், மீட்டிங்போடணும், கொடிக் கம்பம் நடணும் என்றெல்லாம் பேசப்பட, எத்தனை நாட்களுக்குத்தான் இதேபோலஸ்டீரியோ டைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பது? இன்னைக்கு நம்ம சமுதாயத்தினரேஇடஒதுக்கீட்டின் பலனை ஓரளவு பெற்று முன்னேறி இருக்கின்றனர். படித்தவர்கள் நிறைஞ்சுஇருக்காங்க. கார்ப்பரேட் சமூகமா மாறிக்கிட்டு இருக்கு. நம்ம பிரச்சாரம் வித்தியாசமா இருக்கணும்’என்ற ஒரு குரல் ஒலித்தது. அது வேறுயாருமல்ல சவுமியா அன்புமணிதான். அவரே தொடர்ந்து,
‘ஒன் மேன். ஒன் ஷோ’ இதுதான் நம் பாணி.
1. முழுக்க முழுக்க அன்புமணியை போக்கஸ் செய்யணும்
2. படித்த வர்க்கத்திடம் செல்லவேண்டும்
3. எங்கும் சாதி அடையாள அரசியல் பேசாமல் பொதுப் பிரச்னைகளைப் பேசணும்
4. சிறப்பான மாற்று அரசு நிர்வாகத்தை பாமக-வால் கொடுக்க முடியும் என்று, மக்கள் மனதில்அழுந்தப் பதிவுசெய்யணும்
5. மக்களை நேரடியாகச் சென்று சேர வேண்டும்.
என, ஐந்து திட்டங்களைக் கூறினார். அவரின் ஆலோசனைகளுக்குப்பிறகு எடுத்த முடிவுதான்வண்டலூரில் நடந்த பவர் பாய்ன்ட் பிரசன்டேசன் எனும் ஹைடெக் மாநாடு’’ என்று, நீண்டவிளக்கங்களைக் கொடுத்த பாமக-வினர் கையில் இருந்த இளநீரை நமக்கும் பரிமாறிவிட்டு அவர்களும்குடித்து கொஞ்சம் இளைப்பாறினர். அதன்பின் தொடர்ந்தவர்கள் ‘இதையொட்டித்தான் ஒரு பன்னாட்டுவிளம்பர நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு அதில் வெளியானதுதான் ‘மாற்றம் முன்னேற்றம்அன்புமணி’ டைப் போஸ்டர் பிரச்சாரம். முக்கியச் சாலைகள் தொட்டு சின்ன சந்துகூடவிட்டுவைக்காமல் அன்புமணியின் சோலோ போஸ்டர் தென்படணும். இருவது நாளைக்கு ஒருவித்தியாச போஸ்டர்கள் பதிவு செய்யணும்’ என்று முடிவெடுத்து அதைச் செய்தும் காட்டினோம்.மறுபுறம், தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு நடந்தது. கிரேடுவாரியாக தொகுதியைப் பிரித்துநாங்கள் மிக வலுவாக இருக்கும் 110 தொகுதிகளை ‘ஏ’ கிரேடு தொகுதியாகப் பிரித்துள்ளோம். ஒருவருடம்முன்பே இதற்கான வேட்பாளர்களை ஏறக்குறைய முடிவுசெய்து அவர்கள் தொகுதியில்பிரச்சாரப் பணிகளை தொடர்ந்து செய்துவருகின்றனர். ‘அன்புமணி அன்புமணி அன்புமணி வந்தால்மாற்றம் நிச்சயம்’ எனும், இந்த ஒற்றை விஷயத்தை மட்டுமே பதிவுசெய்யும் பிரச்சாரத்தை தலைமைசொன்னபடி செய்துவருகின்றனர். மக்களிடம் திரும்பத்திரும்ப ஒன்றைச் சொல்லும்போது ஆழமாகமனதில் பதிந்துவிடும். மேலும் ‘எல்லோருக்கும் கமர்சியலான தொலைக்காட்சிகள் இருக்கு. கடைசிக்கட்டத்தில் அதன்மூலம் அவர்கள் மக்களிடம் நெருங்கிவிடுவது எளிது. நமக்கு அப்படியில்லை.அதனால், குறைந்தது ஒரு ஆண்டாவது மக்களிடம் சென்றால்தான் பதியமுடியும்’ என்று அன்புமணிஉத்தரவிட்டார். இந்த ஏ கிரேடு தொகுதிகளில் பெரும்பாலும் மிகுதியாக வன்னியர்கள் உள்ளவை.இங்கே சமுதாய விசயங்களைப் பேசுவது, திண்ணைப் பிரச்சாரம் செய்வது, தொகுதிப் பொறுப்பாளர்பதினைந்து நாட்களுக்கு ஒருநாள் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து, அங்கே சொந்தச் சாதியினரைகூட்டி குலம் கூடும் சமபந்தி விருந்து போடுவது. அதாவது, குலதெய்வ வழிபாட்டுக்குப் போவதுபோல.அங்கே கறி முதற்கொண்டு அனைத்து வகை விருந்தும் பரிமாறுவது. இப்படி, புதுப்புது வகையில்பிரச்சாரத்தை மேற்கொண்டு நடத்திவருகிறோம். மக்களோடு மிக நெருக்கமா கலக்கணும் இதுதான்திட்டம்.
அன்புமணி தருமபுரி அல்லது பென்னாகரத்தில் போட்டியிட உள்ளார். அவர் நிற்கவில்லை என்றால்பென்னாகரம் அல்லது மேட்டூர் தொகுதியில் நிற்கிறார் கோ.க.மணி. காடுவெட்டி குருவுக்கு ஜெயங்கொண்டம் தொகுதி, சேலம் மேற்கில் அருள் அல்லது மு.கார்த்தி, சங்ககிரியில் கண்ணையன்,ஓமலூரில் தமிழரசு, எடப்பாடியில் கண்ணையன் அல்லது மு.கார்த்திக், சேலம் வடக்கில் கதிர் இராசரத்தினம் நிற்க இருக்காங்க. தற்போது மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் நேர்காணல்முடியும் தருவாயில் உள்ளன. இதுல அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும்படி வேட்பாளர்கள்தேர்வு செய்யப்பட உள்ளனர். உதாரணமா, வெள்ளாள கவுண்டரான மலையப்பசாமி கவுண்டருக்கு ஒருதொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் ஆத்தூர் தனித் தொகுதியில்கூட ஒரு தலித் பெண் வேட்பாளரை நியமித்து தீவிர வேலைகள் நடந்துவருகிறது. இதுல ஸ்டார் வேட்பாளர்களை ஆதரித்து சவுமியாஅன்புமணி பிரச்சாரம் செய்ய உள்ளாங்க” என்றவர்கள் தொடர்ந்து,
“234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துவது. தென் மாவட்டங்களில் தொகுதிக்கு குறைந்ததுபத்தாயிரம் வாக்குகள் வாங்க வேண்டும். இதில், ஏ கிரேடு 110 தொகுதிகளில் தீவிர களப்பணி, அதில் 40 தொகுதிகளை குறிவைத்து வெற்றிக்குப் போராடணும். தருமபுரி, பென்னாகரம், பாலகோடு, பாப்பிரெட்டி, எடப்பாடி, மேட்டூர், சேலம் மேற்கு, ஓமலூர், செங்கல்பட்டு, அரக்கோணம், நெய்வேலி, விருதாச்சலம், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, குன்னம், பண்ருட்டி, கடலூர், பவானி, பரமத்தி வேலூர், சோழிங்கநல்லூர், காஞ்சி, செஞ்சி, ஜெயங்கொண்டம், சங்ககிரி மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய இந்த 25 தொகுதிகளில் வெகு தீவிரமாக உழைக்கணும். இறுதியாக கட்டாயமாக தனித்து 20 தொகுதிகளை வென்றே தீரவேண்டும். இதுதான், அன்புமணியின் திட்டம்’’என்றனர் பெருமூச்சுவிட்டபடி.
20ல் வென்றால் 2016ல் எப்படி அன்புமணியை முதல்வர் நாற்காலியில் அமரவைக்க முடியும்?என்றோம் இயல்பான சந்தேகத்தோடு.
‘இதே சந்தேகம் எங்களுக்கும் இருந்தது. ஆனால், தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது.அப்போது, நம் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தலாம். இது, ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியக்காரணியாக மாற்று கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், அவர்களின் வயது, சோர்வு இவற்றையொட்டி, 2021ல் ஓர் வெற்றிடம் ஏற்படும். அதை நாம் நிரப்பவேண்டும். அதற்கு மக்களின் நம்பிக்கையைப்பெறவேண்டும். அனைத்துச் சமூகத்தினரும் குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள் நம்மைஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய மாணவர்கள் அன்றைக்கு நமக்கு வாக்காளர்கள். அதைவைத்து2021 இலக்கை நோக்கி ஓடுங்கள். நாக் அவுட்டில் வெல்லாமல் இறுதிப் போட்டியில் வெல்லமுடியாது. ‘2016’- நாக்-அவுட் போட்டி. ‘2021’ இறுதிப் போட்டி. இதில் வெல்லத் தயாராகுங்கள். என உத்தரவிட்டு,அதற்கு
1. டோர் கேன்வாஸ், திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள்.
2. 20 பேருக்கு ஒருவர் எனப் பிரித்து தொடர்ச்சியாக சந்தியுங்கள்.
3. அன்புமணியின் பேச்சுகளை சி.டி.யாக பதிவுசெய்து பரப்புங்கள்.
4. பாமக வரலாறு, மக்களுக்குச் செய்த சாதனைகளை வீடியோ திரையில் கிராமங்களில்ஒளிபரப்புங்கள்.
5. இளைய வாக்குகளைக் கவர எஸ்எம்எஸ், முகநூல், வாட்ஸ்அப் சமூக வலைதளப் பிரச்சாரம்செய்யுங்கள்.
என, ஐந்து கட்டளைகளையும் இட்டுள்ளார் அன்புமணி. அவரின் கட்டளைகளைப் பின்பற்றி முதல்வர்கோப்பையை வெல்வோம்” என்றனர் நம்பிக்கையோடு.
வன்னியர் சங்கம், சமூக நீதி, கூட்டணி சவாரி, தமிழ் தேசியம், தலித்-பிற்படுத்தப்பட்ட சாதிகள்ஒற்றுமை, பின் மீண்டும் தலித்துகளுக்கு எதிரான சாதியக் கட்சிகளின் கூட்டிணைவு என ஒவ்வொருகாலகட்டத்திலும் ஒவ்வொரு களத்தில் பயணித்த பாமக, தற்போது ‘மாற்றம் முன்னேற்றம்’ என்றதுடுப்பைப் போடத் தொடங்கியுள்ளது. எதிலும் நிலைத்ததன்மையின்மை, நிலைப்பாடுகளைமாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பவாதம், தேர்தல் இல்லாத காலங்களில் சமூக ஓர்மையைக்குலைக்கும்வகையில் ஓங்கி ஒலிக்கும் சாதியம் என்ற ஓட்டைகளை அடைத்தால், நிச்சயம் பாமகஎனும் படகு கரையைக் கடக்கும். ஏனெனில், எந்தப் பயணியும் ஓட்டை விழுந்த படகில் பயணிக்க முயற்சிப்பதில்லை.,”









