”தலைவரின் குட்டி கதை”… ’லால் சலாம்’ ஆடியோ லாஞ்ச் அப்டேட்!

Published On:

| By Monisha

lal salaam audio launch date

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”.

இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி ஸ்ரீ சாய்ராம் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக நடிகர் ரஜினியின் குட்டி கதை உள்ளதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

உலக அரங்கில் இந்திய பங்குச்சந்தை படைத்த புதிய சாதனை!

அந்த ரெண்டு பேருக்கும் தான் போட்டியே… வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share