புளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்திய பங்குச்சந்தை உலக அரங்கில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று (ஜனவரி 22) இந்திய பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்ட மூலதன பங்குகள் $4.33 டிரில்லியன் டாலரைத் தொட்டது.
இதன் மூலம் முதன்முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை($4.29 டிரில்லியன்) பின்னுக்குத்தள்ளி, இந்திய பங்குச்சந்தை உலக அரங்கில் 4-வது இடத்தினை பிடித்துள்ளது.
4 வருடங்களில் முதன்முறையாக கடந்த டிசம்பர் 5-ம் தேதி இந்திய பங்குச்சந்தை $4 டிரில்லியன் டாலரைத் தொட்டது. இந்த நிலையில் தற்போது $4.33 டிரில்லியன் டாலரைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
பங்குச்சந்தையை பொறுத்தவரை உலக அரங்கில் முதல் மூன்று இடங்களை அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தக்க வைத்துள்ளன.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத அரசியலா? மனித அரசியலா? ஒரு கை பார்த்து விடுவோம்: உதயநிதி
தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!