அந்த ரெண்டு பேருக்கும் தான் போட்டியே… வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்

Published On:

| By Manjula

ishan kishan rishabh pant in contention

உலகக்கோப்பை டி2௦ தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திட, இரண்டு வீரர்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்கள் இருப்பதால் உலகக்கோப்பை அணியில் யாரை தேர்வு செய்வது என்பது தான் தேர்வுக்குழுவினருக்கு பெரிய சவாலாக உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது சிராஜ், அக்சர் படேல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கேஎல் ராகுல் என 10 வீரர்களின் இடம் உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி2௦ தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் இருவருக்கும் அணியில் இடமுண்டு என்பதை ராகுல் டிராவிட் சூசகமாக தெரிவித்து விட்டார்.

இதனால் மீதமுள்ள 3 இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்திட ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து, இந்திய தேர்வுக்குழு காத்துக்கொண்டுள்ளது.

இதில் ரிஷப் பண்ட், இஷான் கிஷன் இருவரில் ஒருவருக்கு விக்கெட் கீப்பராக இடம் கிடைக்கலாம் என்பது தெரிகிறது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமீபத்தில் அளித்த பேட்டியில்,

”உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ரிஷப் பண்ட், இஷான் கிஷன் இடையே தான் போட்டி நிலவுகிறது”, என தெரிவித்து இருக்கிறார். இதனால் வருகின்ற ஐபிஎல் தொடரில் இருவரும் தங்களுடைய திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரல், கே.எஸ்.பரத் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.

கே.எல்.ராகுல் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடும் பட்சத்தில், கே.எஸ்.பரத் அல்லது துருவ் ஜுரல் இருவரில் ஒருவர் முழுநேர விக்கெட் கீப்பராக செயல்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel