பட்டாசு குடோன் விபத்து: பிரதமர், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

Published On:

| By Minnambalam

krishnagiri fire crack pm modi mk stalin ex gratia

பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோன் இன்று காலை 10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் பட்டாசு குடோன் மற்றும் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரை மட்டமானது. வெடி விபத்தின் போது சம்பவ இடத்தில் 4 பேரும் மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலை விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தது வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதம மந்திரியின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசு சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

செல்வம்

“அப்துல் கலாம் கனவை மோடி நிறைவேற்றுகிறார்” – அமித்ஷா

லியோ பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share