பழனிசாமி வாத்தியாராக கவுண்டமணி

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜூன்,சத்யராஜ், ராமராஜன் இவர்களின் நடிப்பில் வெளியான படங்களில் கவுண்டமணி தனித்தோ அல்லது செந்திலுடன் இணைந்தோ நடித்த காமெடி காட்சிகள் இன்றைக்கும் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிக்கு தவிர்க்க முடியாதவை.

Koundamani as Palaniswami Vathiyar

சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை.

வயது முதுமை காரணமாக கவுண்டமணி – செந்தில் கூட்டணி திரைப்படங்களில் நடிப்பது இல்லை.

கவுண்டமணி அவ்வப்போது நண்பர்கள் வற்புறுத்தல், கதையின் தேவைகருதி படங்களில் நடித்து வருகிறார்.

2015ஆம் ஆண்டு வெளியான 49-ஓ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்த கவுண்டமணி ஏழு வருடங்களுக்கு பின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘பழனிசாமி வாத்தியார்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.

பழனிச்சாமி படத்தில் கவுண்டமணியுடன் தற்போதைய காமெடி நடிகர்கள் யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், டி.சிவா, மனோபாலா, நந்தகோபால், ஆர்.கே.சுரேஷ், ஜெ.எஸ்.கே.சதீஷ் குமார், மதுரை டாக்டர் சரவணன்,

மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார், ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

யோகா டீச்சராக சஞ்சனா சிங் நடிக்கிறார். மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்.

இராமானுஜம்

விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: சுசீந்திரன்

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி” – ஓபிஎஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share