நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. 90-கள் காலக்கட்டத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதே குறைத்துக் கொண்டார். கடந்த ஆறு வருடங்களாக உடல்நிலை காரணமாக அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கவுண்டமணியின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்தாண்டு நடிகர் சிவகார்த்திகேயன் கவுண்டமணியைச் சந்தித்து அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையி மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தின் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் தான் நடிகர் கவுண்டமணி சிவகார்த்திகேயனுடைய மாமா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஆறு வருடங்களுக்குப் பிறகு கவுண்டமணி திரையில் வருவதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இது குறித்துப் படக்குழு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆதிரா