பாசுமதி அரிசி, சீரகச் சம்பா என எந்த அரிசியில் பிரியாணி செய்தாலும், மேலோட்டமாக மட்டுமே கழுவ வேண்டும். ஒருமுறை கழுவினால் போதுமானது. இது, வாசனையை அப்படியே தக்கவைத்துக்கொள்ள உதவும்.
அசைவ பிரியாணிக்கு 1:1.5 பங்கில் அரிசியும் தண்ணீரும் சேர்க்கலாம். சைவ பிரியாணிக்கு 1:2 பங்கு சரியாக இருக்கும்.
தண்ணீரில் அரிசி சேர்ப்பதற்குமுன், நெய்யில் அரிசியை வறுத்தெடுத்துச் சேர்த்தால், பிரியாணி உதிரியாக இருக்கும்.
பெரிய அடுப்பில் மட்டுமே பிரியாணி செய்ய வேண்டும். முதல் கொதி வந்த பிறகுதான் அரிசியைச் சேர்க்க வேண்டும். அரிசி சேர்த்த பிறகு, நெருப்பை முழுவதுமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். விசில் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏழிலிருந்து பத்து நிமிடத்திற்கு, குறைந்த நெருப்பில் வைத்து இறக்கிவிடலாம்.
அடுப்பிலிருந்து இறக்கியபின், கடைசியில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கலந்துவிடவும். நறுமணத்திற்காக மல்லி மற்றும் புதினாத் தழைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
எந்த வகை பிராணியாக இருந்தாலும், காரத்தைக் குறைத்து, அதில் சேர்க்கப்படும் காய்கறிகள், மாமிச அளவுகளை அதிகரித்துச் செய்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. உதாரணத்திற்கு, ஒரு கப் அரிசிக்கு இரண்டு அல்லது மூன்று கப் ஃப்ரெஷ் காய்கறிகளை சேர்த்துச் சமைக்கலாம். இப்படிச் செய்வதால், உடலுக்கு சரிசம அளவு சத்து சேரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரஸ் – பாஜக வேறுபாடு இதுதான் : அரசியல் சாசன விவாதத்தில் அனல் பறந்த ஆ.ராசா பேச்சு!
“அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியது காங்கிரஸ் குடும்பம்”… நாடாளுமன்றத்தில் மோடி கடும் தாக்கு!