வடகிழக்கு பருவமழையின் முதல் லீவ்.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Published On:

| By Mathi

5 distrists announced leave tomorrow for school

கனமழை காரணமாக சென்னை உட்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 21-ந் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

ADVERTISEMENT

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

முதலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share