பதான்கோட் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளித்ததன்மூலமாக, பாஜக-வினர் பாரதத் தாயின் முதுகில் குத்தி இருக்கிறார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எம்.ஜே.அக்பர், “கெஜ்ரிவால், தனது அறியாமையை தனது வாயாலேயே வெளிப்படுத்தி இருக்கிறார். அயல்நாட்டுக் கொள்கைகள் மற்றும் மற்ற நாடுகள் உடனான உறவுகளில் இருக்கும் சிக்கலான வரலாறு மற்றும் அதன் நுட்பங்கள் ஆகியவை குறித்த அறியாமையை கெஜ்ரிவால் வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.









