கச்சத்தீவு.. முதல்வர் விஜய்க்கு ஈழத் தமிழ் மீனவர்கள் விடுத்துள்ள பரபரப்பு எச்சரிக்கை!

Published On:

| By Mathi

Katchatheevu CM Vijay Srilanka Tamil Fishermen

கச்சத்தீவு (Katchatheevu) விவகாரத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் பேசினால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று இலங்கை யாழ்ப்பாண மீனவர்கள் (Sri Lankan Tamil Fishermen) தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு யாழ் மாவட்ட மீனவ மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம்.

கச்சத்தீவு எங்கள் சொத்து (Katchatheevu)

கச்சத்தீவு இலங்கையின் சொத்து. முறைப்படி இலங்கை அதனை பெற்றுக் கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக கடற் தொழில் மக்களுக்கு நன்கு தெரியும்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சதீவை இந்தியா மீட்க வேண்டும் என முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார்.

அப்போது நாங்கள் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை ஏனெனில் தமிழக தேர்தல்களில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வேட்பாளர்கள் இவ்வாறு பேசுவது தொடர்கதையான நிகழ்வு.

ADVERTISEMENT

ஆனால் தற்போது தமிழக முதல்வராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகையால் இனி கச்சத்தீவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை முதல்வர் விஜய் பேசக் கூடாது.

கச்சத்தீவு விவகாரத்தை முதல்வர் விஜய் கையில் எடுக்க நினைத்தால் யாழ் மாவட்ட மீனவவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்துங்க..

யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சம்மேளன தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ்:

தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் மீனவர்களால் இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது மீனவர்களின் பல கோடி பெருமதியான பெறுமதியான வலைகளையும் நாசம் செய்து விட்டார்கள்.

ஆகவே எமது கடற் பகுதிக்குள் அத்துமீறி உள்நுளையும் மீனவர்களை கட்டுப்படுத்த முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share