அயோத்திதாசர் பண்டிதரின் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

சமூக சீர்திருத்தவாதி அயோத்திதாசர் பண்டிதரின் பிறந்தநாளையொட்டி, அவரது முழு உருவ சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, தீண்டாமை, தமிழ்மொழி உணர்வு, சுயமரியாதை, பகுத்தறிவுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியவர் அயோத்திதாச பண்டிதர்.

ADVERTISEMENT

அயோத்திதாசர் பண்டிதரின் 181 ஆவது பிறந்தநாள் இன்று (மே 20) கொண்டாடப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், என்.ஆனந்த், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share