கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: காகர்லா உஷா ஐஏஎஸ் தலைமையில் குழு அமைப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 25 Nov 2026, 5:33 PM

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றம் தலையீட்டிற்கு பின் பாதிக்கபட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உள்புகார் குழுவை அமைத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து விசாரணை நடத்த, 4 பேர் கொண்ட உள் புகார் குழுவை (Internal Complaints Committee) அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இக்குழுவின் தலைமை அதிகாரியாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் காக்கர்லா உஷா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் எஸ். மதுமதி ஐ.ஏ.எஸ்., சட்டத்துறைச் செயலாளர் பி. சுமதி மற்றும் சென்னை மானம்பாக்கத்தைச் சேர்ந்த சுனிதா ஜோ ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேர் கொண்ட குழு பெண் அதிகாரியின் புகார் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளும். இந்த குழு விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க முயற்சிக்க வேண்டும். விசாரணையின் முடிவு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel