ஜியோ தீபாவளி ஆஃபர்: 10 மாசம் பணம் கட்டினா 15 மாசம் இன்டர்நெட்! ஒரு மிஸ்டு கால் போதும்!

By Minnambalam Desk

|

Published on 8 Nov 2026, 7:49 AM

தீபாவளியை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தன் JioHome வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 10 மாத ரீசார்ஜ் கட்டணத்தைக் கட்டினால், கூடுதலாக 5 மாதம் இலவசம். அதாவது 10 மாதக் கட்டணத்தில் மொத்தம் 15 மாதம் இன்டர்நெட்டும் பொழுதுபோக்கு வசதிகளும் கிடைக்கும்.

JioHome Freedom Offer – என்னென்ன விவரங்கள்?

ADVERTISEMENT

இந்தச் சலுகைக்குப் பெயர் ‘JioHome Freedom Offer’. JioFiber, JioAirFiber பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தும்.

  • மாதம் ரூ.666 வீதம் 10 மாதங்களுக்கு, மொத்தம் ரூ.6,660 செலுத்த வேண்டும்.
  • அதற்குப் பதிலாக 15 மாத சேவை கிடைக்கும்.
  • இந்த 5 மாத இலவசச் சலுகை, ஏற்கெனவே JioHome இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சலுகையை எப்படிப் பெறுவது?

ADVERTISEMENT

தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 8219582195 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு வரும் உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தியில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் சலுகை கிடைத்துவிடும்.

1,000-க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், OTT

ADVERTISEMENT

JioHome சேவையில் இன்டர்நெட்டோடு நேரலை டிவி சேனல்களும் பல OTT தளங்களும் கிடைக்கின்றன. 15 மொழிகளில் 1,000-க்கும் அதிகமான டிஜிட்டல் சேனல்கள் உண்டு. JioTV+ செயலி மூலம் ஒரே செட்டாப் பாக்ஸை வைத்து, இரண்டு ஸ்மார்ட் டிவிகளில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதியும் இருப்பதாக ஜியோ சொல்கிறது.

புது கனெக்‌ஷன் வாங்குபவர்களுக்கு?

புதிய வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சலுகை இருக்கிறது. 2 மாத JioHome திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், கூடுதலாக ஒரு மாத சேவை இலவசமாகக் கிடைக்கும்.

பணம் கட்டும் முன்: சலுகை, நிபந்தனைகள் உங்களுக்குப் பொருந்துகிறதா என்பதை ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது MyJio செயலியில் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel