சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் பதவிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் வேட்பு மனுவை சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தார்.

இன்று மாலையுடன் சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனால் ஜே.சி.டி. பிரபாகரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

ADVERTISEMENT

இதனால் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். 

துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

ADVERTISEMENT

இதற்கான அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிக்கவுள்ளார்.

துணை சபாநாயகராகும் ரவிசங்கர் திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் வெற்றி பெற்றவர். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

ADVERTISEMENT

மொத்தமாக 66,263 வாக்குகள் பெற்ற ரவிசங்கர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரோஜாவை 9,614 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் 49,222 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கிய கவுசல்யா 8,436 வாக்குகளுடன் 4ஆம் இடம் பிடித்தார் 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share