ஜெயம் ரவியின் ‘சைரன்’ எப்படி இருக்கிறது?- Public Review

Published On:

| By Manjula

Jayam ravi siren movie

நடிகர் ஜெயம் ரவியின் ‘சைரன்’ திரைப்படம் இன்று (பிப்ரவரி 16) உலகம் முழுவதும், சுமார் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. Jayam ravi siren movie

செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் ஜெயம் ரவி வெளியில் வந்து அதற்குக் காரணமானவர்களை பழிவாங்குவது தான் ‘சைரன்’ படத்தின் கதை.

திலக வர்மனாக நாயகன் ஜெயம் ரவி நடித்துள்ள இப்படத்தில், போலீஸ் அதிகாரி வேடங்களில் கீர்த்தி சுரேஷ், யோகிபாபு நடித்துள்ளனர். ஜெயம் ரவியின் மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்.

முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.

🔴 Live : Siren Public Review | Siren Movie Review  | Jayam Ravi | Anthony Bhagyaraj | Keerthy Suresh

பிக்பாஸ் புகழ் கூல் சுரேஷ் இந்த படம் குறித்து நம்முடைய மின்னம்பலம் சேனலின் நேரலையில் பேட்டி அளித்துள்ளார். இதேபோல ரசிகர்களும் ‘சைரன்’ குறித்த தங்களுடைய விமர்சனத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ட்ரெய்லர் வெளியான போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தற்போது படம் வெளியான நிலையில் அந்த எதிர்பார்ப்பினை ‘சைரன்’ தக்க வைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

இதேபோல சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் சைரன்’ குறித்து கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதையும் இங்கே பார்க்கலாம்.

ராம் என்னும் ரசிகர், ”படத்தின் முதல்பாதியில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கோமாளி படத்திற்கு பிறகு ஜெயம் ரவி-யோகிபாபு கூட்டணி மீண்டும் இப்படத்தில் கலக்கி இருக்கின்றனர்,” என தெரிவித்து இருக்கிறார்.

ஸ்ருதி என்னும் ரசிகை, ”சைரன் ஆரம்பம் முதல் முடிவு வரை திரில்லிங் ஆக உள்ளது. ஜெயம் ரவி கதாபாத்திரம் உக்கிரமாக இருக்கிறது,” என பாராட்டி இருக்கிறார்.

https://twitter.com/shruthi_ra/status/1758364326371729594

அஞ்சான் கௌசிக் என்னும் ரசிகர், ”ஜெயம் ரவி-கீர்த்தி சுரேஷ் இடையிலான காட்சிகள் நன்றாக உள்ளன. யோகிபாபு காமெடி நன்றாக இருக்கிறது. முதல் பாதி சிறப்பு,” என தெரிவித்துள்ளார்.

நிகிதா படேல் என்னும் ரசிகை, ”யோகிபாபுவின் டைமிங் காமெடி சிறப்பு. சைரன் அனைத்து தரப்பினருக்குமான படம்,” என விமர்சனம் செய்துள்ளார். Jayam ravi siren movie

மொத்தத்தில் ஜெயம் ரவியின் இந்த ‘சைரன்’ படத்தை ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம்: அஜய் மக்கான் புகார்!

தாசில்தாரை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி விடுதலை!

அரசு மருத்துவமனையில் குழந்தையை வைத்திருந்த இன்குபேட்டருக்கு… கல்லால் முட்டுக்கொடுத்த அவலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share