காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் இன்று (பிப்ரவரி 16) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அஜய் மக்கான், ”காங்கிரஸ் கட்சி அளித்த காசோலைகளை வங்கிகள் ஏற்கவில்லை என்ற தகவல் நேற்று கிடைத்தது. இதேபோல, இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்கின் காசோலைகளையும் ஏற்கவில்லை.
2018-19 நிதியாண்டு கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.210 கோடி அபராத தொகை செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, கிரவுட் ஃபண்டிங்க் பணமும் முடக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது என்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்.
தற்போது எங்களிடம் செலவு செய்ய, மின் கட்டணம் செலுத்த, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை” என்று அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தாசில்தாரை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி விடுதலை!
அரசு மருத்துவமனையில் குழந்தையை வைத்திருந்த இன்குபேட்டருக்கு… கல்லால் முட்டுக்கொடுத்த அவலம்!