தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக DYFI, SFI ஆகிய மாணவர் இயக்கங்கள் 48 மணிநேர தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தன. இதனடிப்படையில் சென்னையில் பல இடங்களில் இன்று கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால் போராட்டத்தை நடத்த விடாமல் போலீசார் வலுக்கட்டாயமாக தங்களை கைது செய்வதாக மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
