ADVERTISEMENT

பல்கலையில் அரை நிர்வாண போராட்டம்: ஈரான் மாணவி கைது… பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

தெகரான் பல்கலையில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய மாணவியை ஈரான் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரான் தலைநகர் தெகரானில் இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு, படித்து வந்த மாணவி ஒருவர் பாதுகாவலர்கள்  தன்னை துன்புறுத்துவதாக கூறி தனி ஆளாக போராட்டம் நடத்தினார். அப்போது, திடீரென்று தன் ஆடைகளை களைந்து அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ பரவி வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அந்த மாணவியை அப்படியே சுருட்டி எடுத்து காரில் போட்டு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அந்த மாணவியின் பெயர் அகு தாரெயி என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, மாணவியின் வீடியோ சோசியல் மீடியாக்களில் பரவியதால் மாணவ மாணவிகள் ஈரானில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  ஆசாத் பல்கலை செய்தி தொடர்பாளர் அமீர் மக்ஜோக் தன் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  “மாணவி பல்கலைக்கு உரிய டிரெஸ் கோடை பின்பற்றவில்லை. பாதுகாவலர்கள் அவரை எச்சரித்தனர். இதனால், அந்த மாணவி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். அந்த மாணவி கணவரை பிரிந்து வாழ்கிறார். இரு குழந்தைகளுக்கு தாய் ஆவார். அவருக்கு சிறிது மனநிலை பாதிப்பும் இருந்தது. தற்போது, மன நல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 2022 ஆம் ஆண்டு பழமைவாத நாடான ஈரானில் உரிய டிரெஸ் கோடை பின்பற்றாததால், மாஷா அமினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். போலீசார் கஸ்டடியில் இருந்த போது, அவர் இறந்து போனார். அப்போது, ஈரான் பெண்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தங்கள் தலை முக்காடு துணியை எரித்தும் போராட்டம் செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

 குமரி டூ திருப்பூர் வரை… எங்கெங்கு கனமழை?

ஐஸ்வர்யாவின் 51வது பிறந்த நாள்… கண்டுகொள்ளாத பச்சன் குடும்பம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share